திரில் வெற்றிப் பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்திய மகளிர் அணி!
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் டெஸ்ட் போட்டியில் 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்தியா, தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்களை குவித்தது. தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா சதமடித்தார். ஹர்மன்பிரித் கவுர் 103 ரன்னிலும், ரிச்சா கோஷ் 25 ரன்னிலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா சார்பில் நோன்குலுலேகோ ம்லபா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.