தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி! தொடரையும் சமன் செய்தது!
06:16 PM Jan 04, 2024 IST
|
Web Editor
ஜெய்ஸ்வால் 28, ஷுபம்ன் கில் 10, விராட் கோலி 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். ரோஹித் சர்மா 17 ரன்களுடனும் ஸ்ரேயாஷ் ஐயர் 4 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றிக்கு உதவினார்கள். இந்த வெற்றியின் மூலம் 1-1 என சமநிலையில் முடிந்தது. கேப்டவுன் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற முதல் ஆசிய நாடாக இந்திய அணி திகழ்கிறது. தென்னாப்பிரிக்காவுக்கு சென்ற இந்திய அணி டி20, டெஸ்டினை டிரா செய்தது. ஒருநாள் போட்டியில் வென்றது குறிப்பிடத்தக்கது.
Advertisement
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதோடு, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற புள்ளிக்கணக்கில் சமன் செய்தது.
Advertisement
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 55 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்தியாவும் 153 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இரண்டாம் இன்னிங்ஸில் மார்க்ரம் மட்டும் சதமடிக்க தென்னாபிரிக்கா 176 ரன்களுக்கு பும்ராவின் அசத்தலான பந்து வீச்சில் ஆல் அவுட்டானது. 79 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 11.6 ஓவரில் 80/3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
Next Article