டி20 போட்டிகளில் இந்திய அணி புதிய சாதனை!
டி20 போட்டிகளில் இந்திய அணி புதிய சாதனையை படைத்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று (நவம்பர் 23) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 209 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 80 ரன்களும், இஷான் கிஷன் 58 ரன்களும் எடுத்தனர். இறுதிக்கட்டத்தில் ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்தார்.
இதையும் படியுங்கள்: நடிகை மணிஷா யாதவுக்கு பாலியல் துன்புறுத்தலா? – இயக்குநர் சீனு ராமசாமி விளக்கம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. நேற்றையப் போட்டியில் இந்திய அணி துரத்திப் பிடித்த 209 ரன்களே இந்திய அணியால் வெற்றிகரமாக துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்காகும். இதற்கு முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 208 ரன்களை துரத்திப் பிடித்ததே இந்திய அணியால் துரத்திப் பிடிக்கப்பட்ட ரன்களே அதிகபட்ச இலக்காக இருந்தது.
டி20 போட்டிகளில் 200 மற்றும் அதற்கு மேற்பட்ட ரன்களை வெற்றிகரமாக அதிகமுறை துரத்திப் பிடித்த அணியாகவும் இந்தியா மாறியுள்ளது. இதுவரை 200-க்கும் அதிகமான ரன்களை இந்திய அணி 5 முறை வெற்றிகரமாக துரத்திப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் 4 முறை 200 மற்றும் அதற்கும் அதிகமான ரன்களை துரத்திப் பிடித்து தென்னாப்பிரிக்கா 2-வது இடத்தில் உள்ளது.
டி20 போட்டிகளில் அதிகமுறை 200 மற்றும் அதற்கும் அதிகமான ரன்களை துரத்திப் பிடித்த அணிகள்
இந்தியா 5 முறை
தென்னாப்பிரிக்கா -4 முறை
பாகிஸ்தான்-3 முறை
ஆஸ்திரேலியா-3 முறை
இந்திய அணியால் வெற்றிகரமாக துரத்திப் பிடிக்கப்பட்ட இலக்குகள்
209 ரன்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விசாகப்பட்டினம், 2023
208 ரன்கள் மே.இ.தீவுகளுக்கு எதிராக ஹைதராபாத், 2019 207 ரன்கள் இலங்கைக்கு எதிராக மொஹாலி, 2009 204 ரன்கள் நியூசிலாந்துக்கு எதிராக ஆக்லாந்து, 2020 202 ரன்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராஜ்காட், 2013