Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டி20 உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தில் இந்திய அணியின் ரசிகர்கள்! மும்பையில் மக்கள் அலையில் ஊர்ந்து சென்ற வீரர்களின் வாகனம்!

07:53 PM Jul 04, 2024 IST | Web Editor
Advertisement

மும்பையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க ரசிகர்கள் குவிந்ததால் கடற்கரை சாலை ஸ்தம்பித்தது.

Advertisement

பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி கடந்த சனிக்கிழமை (29.06.2024) சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதால் நாடே கொண்டாட்டத்தில் ஆழ்ந்தது. உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள், மும்பையில் வெற்றி ஊர்வலம் செல்ல இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வான்கடே மைதானத்தில் மதியம் முதலே குவியத் தொடங்கினர்.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹார்திக் பாண்டியாவை விமர்சனம் செய்த ரசிகர்கள் இன்று வான்கடே மைதானத்தில் ஹார்திக்...ஹார்திக்... என்று கோஷம் எழுப்பினர்.

ஹார்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது விளையாடிய 14 போட்டிகளில் 4ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்து தொடரில் இருந்து வெளியேறியது. இறுதிப் போட்டியில் மில்லர், கிளாசன் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் ஹார்திக் பாண்டியா. வான்கடே மைதானத்தில் மழை பெய்த போதிலும் ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருந்தனர்.

இந்திய அணி வீரர்களுடன் மும்பை வந்த விமானத்துக்கு தீயணைப்பு வாகனம் மூலம் நீர் பாய்ச்சி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், இந்திய அணி வீரர்கள் பேருந்து மூலம் மும்பை வான்கடே மைதானத்துக்கு வந்தனர். அப்போது, வழியெங்கும் குறிப்பாக மும்பை கடற்கரைச் சாலையில் பல லட்சக்கணக்கான ரசிகர் குவிந்ததால் வாகனங்கள் மக்கள் வெள்ளத்தில் ஸ்தம்பித்தன.

Tags :
news7 tamilNews7 Tamil Updatest20 trophyT20 World ChampionT20 World CupT20 World Cup trophyT20IWC2024Victory ParadeWankhede Stadium
Advertisement
Next Article