Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.
04:35 PM Oct 04, 2025 IST | Web Editor
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.
Advertisement

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. போட்டி அட்டவணைப்படி, இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிகள் வருகிற 19-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடக்கிறது. இதனை தொடர்ந்து டி20 போட்டிகள் அக்டோபர் 29-ந்தேதி முதல் நவம்பர் 6-ந்தேதி வரை நடக்கிறது.

Advertisement

இந்த நிலையில் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஒருநாள் அணிக்கான கேப்டனாக சுப்மன் கில்லும் துணை கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அணியில், ரோகித் சர்மா, விராட் கோலி,அக்சர் படேல், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். டி20 மற்றும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சாம்பியன்ஸ் கோப்பைக்கு பிறகு ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, டி20 போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவும் துணைக் கேப்டனாக சுப்மன் கில்லும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அணியில் அபிஷேக் சர்மா, திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Tags :
BCCICricketindiateamINDvsAUSlatestNews
Advertisement
Next Article