ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு - கேப்டனாக சூர்ய குமார் நியமனம்!
ஆசியாவை சேர்ந்த அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ளது. இத்தொடரில், ஆசியாவை சேர்ந்த 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கிறது. மேலும் ரசிகர்களின் ஆவலோடு எதிர்பார்க்கும் இந்தியா -பாகிஸ்தான் போட்டி வரும் செப்.14-ந்தேதி துபாயில் நடக்கிறது.
இந்த நிலையில் இந்த் ஆசியக்கோப்பயில் பங்கேற்கும் 8 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் துணை கேப்டனாக சுப்மன் கில் இடம் பெற்றுள்ளார். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான் ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
அணி விவரம் :
சூர்ய குமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்ஷர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் சிங் ராணா, ரிங்கு சிங்.
ஆனால் இந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெறாதது விமர்சனத்தை எழுப்பியுள்ளது. நடப்பு ஐபிஎலில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.