Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி!

10:07 AM Mar 05, 2024 IST | Web Editor
Advertisement

உலக தரவரிசை அடிப்படையில் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர் மற்றும் மகளிர் டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளன.

Advertisement

தென்கொரியாவின் பூசன் நகரில் கடந்த மாதம் டேபிள் டென்னிஸ் உலக அணிகள் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது.  இது வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான கடைசி தகுதி சுற்று போட்டியாக அமைந்திருந்தது.  இந்த தொடர் முடிவடைந்த நிலையில் அணிகள் பிரிவில் 7 இடங்கள் எஞ்சியிருந்தன.  இவை தற்போது தரவரிசையின் அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் மகளிர் அணிகள் பிரிவில் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள இந்தியா, 12-வது இடத்தில் உள்ள போலந்து,15-வது இடத்தில் உள்ள சுவீடன் மற்றும் தாய்லாந்து ஆகிய 4 அணிகளும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   ஆடவர் பிரிவில் உலகத் தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள குரோஷியா, 15-வது இடத்தில் உள்ள இந்தியா, 11-வது இடத்தில் உள்ள ஸ்லோவேனியா ஆகிய 3 அணிகளும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளன.

இந்திய டேபிள் டென்னிஸ் வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது. 2008-ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தான் முதன்முறையாக டேபிள்டென்னிஸ் அணிகள் போட்டி அறிமுகம் ஆனது.   இந்த பிரிவில் இந்திய அணிகள் முதன்முறையாக விளையாட தற்போதுதான் தகுதி பெற்றுள்ளது.

Tags :
IndiaOlympiceParis 2024Paris OlympicsQualifytable tennis
Advertisement
Next Article