Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கனடாவில் பகுதிநேர வேலைக்காக வரிசையில் நிற்கும் இந்திய மாணவர்கள்...வைரலாகும் வீடியோ!

06:37 PM Jun 24, 2024 IST | Web Editor
Advertisement

கனடாவில் வேலைவாய்ப்புக்காக நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் வரிசையில் நிற்கும் வீடியோ வைரலாகி வருகிறது. 

Advertisement

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு படிக்கச் செல்லும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. காரணம், அங்கு படிப்புடன் வேலைவாய்ப்பும் வழங்கப்படுவதுதான். இந்தியாவிலிருந்தும் அங்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் கல்வி தரமானதாக இருந்தாலும், கல்வித்தொகையும் அதிகமானதாகதான் இருக்கிறது. இதனால் படிப்பு நேரம் போக, மீதி நேரத்தில் மாணவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அதன்மூலம் வரும் வருமானத்தை வைத்து தங்கள் செலவுகளை கவனித்து வருகின்றனர். இந்நிலையில் காபி ஷாப் ஒன்றின் பகுதிநேர வேலைவாய்ப்பிற்கான நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் வரிசையில் நிற்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கனடாவின் பிரபல உணவகமான டிம் ஹார்டனில் (Tim Hortonss) வேலைவாய்ப்புக்காக நூற்றுக்கணக்கான மாணவர்கள் வரிசையில் நிற்கின்றனர். பல மணி நேரம் வரிசையில் நிற்பவர்களிடம் உணவக ஊழியர்கள், அவர்களது விண்ணப்பங்களை வாங்கிக்கொண்டு பிறகு அழைப்பதாகக் கூறி அனுப்பிவிடுகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
Canadaindian studentsPart-Time JobTim Hortons
Advertisement
Next Article