அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர் சுட்டுக்கொலை!
அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்று கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை கனிசமான அளவு உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு கல்வி பயில அதிகளவு மாணவர்கள் செல்கின்றனர்.
நடப்பு ஆண்டில் தொடக்கத்தில் இருந்து இதுவரை 11 இந்திய மாணவர்கள் மற்றும் இந்திய வம்சாவளி மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் புள்ளி விவரங்களின்படி கடந்த 2018லிருந்து இதுவரை 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 36 மாணவர்கள் அமெரிக்காவில் மட்டும் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
சோனிபட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட மாணவரான சிராக்கின் சகோதரர் ரோமித் தனது சகோதரர் மரணம் குறித்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது..
இதுவரை காவல்துறை தரப்பில் எந்தக் கைதும் நடைபெறவில்லை எனவும் அருகில் இருக்கும் வீடுகளின் சிசிடிவி கேமராக்களை கேட்டால் கூட அவர்கள் ஒத்துழைப்பு தர மறுப்பதாகவும் சிராக்கின் நண்பர்கள் தெரிவித்துள்ளர். இதுவரை சிராக் குடும்பத்தில் வழக்கு மற்றும் மத்திய மாநில அரசை நேரடியாக அணுகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்திய மாணவரான சிராக்கின் உடலை இந்தியா கொண்டு வர முயற்சித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.