Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வரலாறு காணாத சரிவில் இந்திய பங்குச்சந்தை!

இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல நாளான இன்று சரிவுடன் தொடங்கியது.
11:32 AM Apr 07, 2025 IST | Web Editor
Advertisement

இந்திய பங்குச் சந்தை இன்று காலை தொடங்கியது முதலே கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை கடந்த வாரம் ஏறுமுகத்தில் இருந்தன. ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கைகளால், முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளில் இருந்து விலகி பாதுகாப்பான சொத்துக்களில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

Advertisement

இது நீடித்த வர்த்தகப் போரின் அச்சங்களைத் தூண்டி, புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று கடுமையாக சரிவுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே, இன்று காலை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் தலா 3 சதவீதம் சரிவைக் கண்டன.

இந்த நிலையில் தேசிய பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 3000 புள்ளிகள் சரிந்து 72 ஆயிரத்து 509 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதேநேரம், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி புள்ளிகள் சுமார் 930 புள்ளிகள் சரிந்து 21 ஆயிரத்து 975 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

Tags :
declinehistoricIndianstock market
Advertisement
Next Article