ஜப்பானிய பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு...!
ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்கஸ்பர்க் நகரில் நேற்று தொடங்கியது. இதில் பல்வேறு பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் இந்தியாவிலிருந்து பிரதமர் மோடியும் இதில் கலந்து கொண்டுள்ளார்.
இதனிடையே பிரதமர் மோடி ஜப்பானிய பிரதமர் சானே தகாய்ச்சியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாத்திக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பில் குறித்து இந்திய பிரதமர் மோடி எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
"ஜப்பானிய பிரதமர் சானே தகாய்ச்சியுடன் நான் ஒரு பயனுள்ள சந்திப்பை நடத்தினேன். புதுமை, பாதுகாப்பு மற்றும் திறமை இயக்கம் போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி நாங்கள் விவாதித்தோம். கூடுதலாக, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்று நம்புகிறேன். சிறந்த உலகளாவிய சூழலை உருவாக்குவதில் ஜப்பான்-இந்தியா உறவுகள் ஒரு முக்கிய அங்கமாகும்" என்று தெரிவித்துள்ளார்.