Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்கள் - விராட் கோலி செல்வதில் காலதாமதம் ஏன்?

11:52 AM May 29, 2024 IST | Web Editor
Advertisement

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் பயிற்சியை இந்திய வீரர்கள் தொடங்கியுள்ள நிலையில்   விராட் கோலி  இன்னும் அமெரிக்கா செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணம் என்ன விரிவாக காணலாம்

Advertisement

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இணைந்து நடத்தும் இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம்பெற்று விளையாடுகின்றன.

இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குரூப் Aல் உள்ள இந்திய அணி ஜூன் 5-ம் தேதி அயர்லாந்து அணியுடன் தனது முதல் போட்டியை விளையாடுகிறது. ஜூன் 9-ம் தேதி பாகிஸ்தான் அணியுடனும், ஜூன் 12-ம் தேதி அமெரிக்கா, ஜூன் 15-ம் தேதி கனடா ஆகிய அணிகளுடனும் மோதுகிறது.

அணியின் வீரர்களான ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷப் பந்த்( விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன்( விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா,(துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ், யுவேந்திர சகல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக முதல் இரண்டு பேட்ச் வீரர்கள் அமெரிக்கா சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து  இந்திய அணி பயிற்சியைத் தொடங்கியுள்ளது. ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், ஷிவம் துபே, அக்சர் படேல் மற்றும் முகமது சிராஜ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் முதல் பேட்சாக அமெரிக்காவிற்கு சென்றனர். இவர்களுடன் ராகுல் டிராவிட் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் பிற பணியாளர்களும் சென்றடைந்தனர்.

ஐபிஎல் பைனல் போட்டி காரணமாக ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்ஸன், யுஸ்விந்திர சாஹல், ரிங்கு சிங் உள்ளிட்ட வீரர்கள் இரண்டாம் கட்டமாக அமெரிக்க சென்றுள்ளனர். இரண்டு பேட்ச் வீரர்களும் அமெரிக்கா சென்றதை அடுத்து இந்திய வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர். ஆனால் இதுவரை விராட் கோலி மட்டும் அமெரிக்கா செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.

விராட் கோலி மே 30ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் அதன் பின்னர் தான் அவர் இந்திய அணியுடன் சேருவதால் வங்க தேச அணியுடனான முதல் பயிற்சி ஆட்டத்தில் அவர் விளையாடும் வாய்ப்பு குறைவு எனவும் தகவல் வெளியாகியுள்ளது.  “தாமதமாக அணியில் சேரப்போவதாக கோலி முன்பே எங்களிடம் தெரிவித்திருந்தார், அதனால்தான் பிசிசிஐ அவரது விசா தள்ளிப்போட்டது. அவர் மே 30 ஆம் தேதி அதிகாலையில் நியூயார்க்கிற்கு விமானத்தில் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என பிசிசிஐ அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகத்திடம் தெரிவித்தார்.

இந்த நிலையில் மும்பையில் செவ்வாய் கிழமை இரவு அனுஷ்கா ஷர்மாவுடன் கோலி இரவு விருந்திற்காக ஹோட்டலுக்கு செல்லும் படங்கள் இணையத்தில் வைரலாகின. இவர்களுடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் மற்றும் அவரது மனைவி சாகரிகா ஆகியோரும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது

Tags :
2024 T20 World CupCricketindian teamNew YorkT20 World CupUSAVirat Kholi
Advertisement
Next Article