Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஐசிசி-யின் "HALL OF FAME"-ல் இடம்பெற்ற இந்திய வீரர்கள் - வீரேந்திர சேவாக், டயானா எடுல்ஜி கவுரவிப்பு!

05:27 PM Nov 13, 2023 IST | Web Editor
Advertisement

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் வீரேந்திர சேவாக் தவிர டயானா எடுல்ஜி மற்றும் இலங்கையின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Advertisement

சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைப் படைத்த வீரர்களை கவுரவிக்கும் வகையில், ஐசிசி அவர்கள் பெயர்களை ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைக்கும்.அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக், வீருாங்கனை டயனா எடுல்ஜி, இலங்கையின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா ஆகியோர் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், பிஷன் சிங் பெடி, கபில் தேவ், அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், வினோ மன்கட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள சேவாக், இரண்டு முறை முச்சதம் அடித்துள்ளார்.

வீரேந்திர சேவாக் இந்தியா அணிக்காக 104 டெஸ்ட் போட்டிகளிலும், 251 ஒருநாள் மற்றும் 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் 104 டெஸ்ட் போட்டிகளில் 8586 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் இரண்டு முறை டிரிபிள் சதம் அடித்த ஒரே பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக். இது தவிர 23 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார். அதேசமயம், ஒருநாள் போட்டிகளில் 8273 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அரைசதம் 38 , 15 சதங்களை அடித்துள்ளார். இந்திய அணிக்காக விரேந்திர சேவாக் 19 டி20 போட்டிகளில் 394 ரன்கள் குவித்துள்ளார்.

Tags :
Aravinda De SilvaDiana EduljiHall Of FameICCIndian Cricket TeamNews7Tamilnews7TamilUpdatesVirendra Sehwagwomens cricket
Advertisement
Next Article