Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நட்சத்திர ஹோட்டலின் பால்கனியில் துணியை காய வைத்த இந்தியப் பெண் - வைரலாகும் வீடியோ!

01:49 PM Jun 28, 2024 IST | Web Editor
Advertisement

துபாயில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பால்கனியில் துணியை காய வைக்கும் இந்திய பெண் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

இணையத்தில் எப்பொழுதுமே இந்திய தாய் என தனியாகவே ரீல்ஸ்களும்,  மீம்ஸ்களும் பகிரப்படுவது வழக்கம்.  ஏனெனில் மற்ற நாட்டினரோடு ஒப்பிடும்போது இந்தியர்கள் எப்போதும் தனித்துவமாகவே தெரிவர்.  குறிப்பாக நமது அம்மாக்கள் அனைத்திலும் தனித்துவமாக தெரிவர்.  அந்த வகையில் இந்திய தாய் ஒருவரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

துபாயில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலான பாம் அட்லாண்டிஸில் இந்தியர் ஒருவர் உடைகளை காய வைக்கும் வீடியோ ஒன்றை அவரது மகள் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  வீடியோவில் ஹோட்டலின் பால்கனியில் டிரௌசர் ஒன்றை காயவைக்கிறார் . இதனை அம்மா, அம்மாவாக இருக்கிறார் பாம் அட்லாண்டிஸில் என அவரது மகள் பகிர்ந்துள்ளார்.  இந்த வீடியோ தற்போது வரை 90 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருத்துகளையும் பெற்றுள்ளது.

மேலும் ஹோட்டல் நிர்வாகமும் இந்த பதிவிற்கு கருத்து தெரிவித்துள்ளது.  அதில், இது அம்மாவின் கடமை.  இங்கு தங்கியது உங்களுக்கு மகிழ்ச்சியை தந்தது என நம்புகிறோம். துணி காயவைப்பதற்கான கொடியினை நாங்கள் குளியலறையில் இணைக்கிறோம். அதில் நீங்கள் காய வைத்து கொள்ளலாம்” என தெரிவித்தது.

துபாயின் நகரின் அழகியலை மேம்படுத்த பால்கனிகளில் துணிகளை காயவைக்க வேண்டாம் என கடந்த 2021ஆம் ஆண்டே துபாயின் நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது. மீறுவோருக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

Tags :
DubaiHotel BalconyIndian MomViral
Advertisement
Next Article