உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்ட இந்திய MBBS மாணவர்கள்; உதவிக்கரம் நீட்டிய உஸ்பெகிஸ்தான்!..
உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்டு உக்ரைனை விட்டு வெளியேறி, 1000க்கும் மேற்பட்ட இந்திய MBBS மாணவர்களுக்கு உஸ்பெகிஸ்தான் உதவிக்கரம் நீட்டியுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து அங்கு இருந்து பணிபுரிந்து, பயின்று வந்த இந்தியர்களை ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் இந்திய அரசு அவர்களை மீட்டது.
இந்நிலையில், 2021 இல் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து வெளியேற்றப்பட்ட நூற்றுக்கணக்கான இந்திய MBBS மாணவர்கள், உஸ்பெகிஸ்தானில் உள்ள ஒரு முன்னணி மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தங்கள் படிப்பை மீண்டும் தொடங்கி புதிய கல்வி வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்களை மாற்ற முடியுமா என்று உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் கேட்டதை அடுத்து, உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் மாநில மருத்துவ பல்கலைக்கழகம் உக்ரைனில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட இந்திய மருத்துவ மாணவர்களுக்கு இடமளித்துள்ளது.
போர் மூண்டபோது சுமார் 19 ஆயிரம் மாணவர்கள் உக்ரைனில் தங்கி மருத்துவம் படித்துவந்ததாக கூறப்படுகிறது. இதில், 2,000 மாணவர்கள் மீண்டும் தங்களின் படிப்புக்காக உக்ரைன் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.