Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாரீஸ் ஒலிம்பிக்! இந்திய கோல்ஃப் வீராங்கனைகள் அதிதி, தீக்ஷா தகுதி!

09:56 AM Jun 25, 2024 IST | Web Editor
Advertisement

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய கோல்ஃப் நட்சத்திர வீராங்கனைகள் அதிதி அசோக், தீக்ஷா டாகா் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனர்.

Advertisement

2024 டி20 உலகக் கோப்பை முடிந்த கையோடு பாரீஸ் விளையாட்டு போட்டிகள் வருகின்ற ஜுலை 26ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் கோல்ஃப் பிரிவில் பங்கேற்கவுள்ள வீரர்கள் குறித்த அறிவிப்பை இந்திய தேசிய கோல்ஃப் கூட்டமைப்பு இன்று வெளியிட்டது.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு கோல்ஃப் பிரிவில்  இந்திய கோல்ஃப் நட்சத்திர வீராங்கனைகள் அதிதி அசோக், தீக்ஷா டாகர் தகுதி பெற்றுள்ளனர். முன்னதாக, பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில், கோல்ஃப் போட்டியில் இந்தியா சார்பில் ஆடவர் பிரிவில் சுபாங்கர் சர்மா, ககன்ஜித் புல்லர் அகியோர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதையும் படியுங்கள் : ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ திரைப்படத்தில் நடித்த டமாயோ பெர்ரி உயிரிழப்பு!

உலக தரவரிசையில் முதல் 60 இடங்களில் உள்ளோர் நேரடியாக ஒலிம்பிக் தகுதி பெறலாம். 24-ஆவது இடத்தில் அதிதியும், 40 ஆவது இடத்தில் தீக்ஷா டாகரும் உள்ளனர். இந்நிலையில், அதிதி அசோக் மூன்றாவது முறையாகவும், தீக்ஷா டாகர் இரண்டாவது முறையாகவும் ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனா். கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா நான்காவது இடத்தைப் பெற்றிருநத்து குறிப்பிடத்தக்கது.

Tags :
Aditi AshokDiksha DakarIndian golfParis OlympicsQualified
Advertisement
Next Article