Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ICC தர வரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வரலாற்று சாதனை...!

04:28 PM Feb 07, 2024 IST | Web Editor
Advertisement

ஐசிசி டெஸ்ட் போட்டிக்கான பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்துக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா முன்னேறியுள்ளார்.

Advertisement

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம்  ஐதராபாத்தில் நடைபெற்றது.  இதில் 28 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள் ; அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை மனு – சற்று நேரத்தில் தீர்ப்பு…!

இதையடுத்து,  இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப். 4 ஆம் தேதி விசாகப்பட்டிணத்தில் நடைபெற்றது.  இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்.  முதல் இன்னிங்சில் 6 விக்கெட், 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் என 9 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

இந்நிலையில்,  ஐசிசி-யின் டெஸ்ட் போட்டியின் பந்து வீச்சாளர்கள் தரவரிசயிைல் முதல் இடத்தை பிடித்துள்ளார்.  முதன்முறையாக பும்ரா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும்,  டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இதுவரை முதல் இடத்தை பிடித்தது இல்லை.

இந்நிலையில்,  பும்ரா முதல் இடத்தை பிடித்து வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளார். மேலும்,  அதிவேகமாக 150 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் பும்ரா படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  மேலும், ரபடா 2-வது இடத்தில் நீடிக்கிறார்.  அஸ்வின் 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.  கம்மின்ஸ் 4-வது இடத்தில் உள்ளார். ஹேசில்வுட ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறார்.

தற்போதைய ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்:

  1. ஜஸ்ப்ரீத் பும்ரா- 881 புள்ளிகள்
  2. ககிசோ ரபாடா- 851 புள்ளிகள்
  3. ரவி அஸ்வின் - 841 புள்ளிகள்
  4. பாட் கம்மின்ஸ் - 828 புள்ளிகள்
  5. ஜோஷ் ஹேசில்வுட்- 818 புள்ளிகள்
Tags :
BumrahCricketICCIndiaIndiancricketplayerJaspritBumrahTestcricket
Advertisement
Next Article