Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Diwali பண்டிகையை ஒட்டி எல்லையில் இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய - சீன படைகள்!

03:08 PM Oct 31, 2024 IST | Web Editor
Advertisement

தீபாவளியை முன்னிட்டு, கிழக்கு லடாக் எல்லையில் இந்திய - சீன வீரர்கள் இனிப்புகளை பரிமாரிக்கொண்டனர்.

Advertisement

கிழக்கு லடாக், அருணாசலப் பிரதேச எல்லை விவகாரத்தில் இந்தியா – சீனா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வந்த நிலையில், கடந்த ஜூன் 2020 இல் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட கடுமையான மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பெரிய விரிசல் விழுந்தது. இதனைத் தொடர்ந்து கிழக்கு லடாக் பகுதிகளில் இரு நாட்டு ராணுவமும் வீரர்களை குவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.தீபாவளியை ஒட்டி சீன வீரர்களுடன் இனிப்புகளை பகிர்ந்துகொண்ட இந்திய வீரர்கள்

இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், இந்தியா – சீனா ராணுவ அதிகாரிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பல கட்டப் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், கிழக்கு லடாக்கில் உள்ள கட்டுபாட்டுக் கோட்டில் ரோந்து செல்வது தொடர்பாக சீனாவுடன் உடன்பாட்டை எட்டியுள்ளதாக இந்தியா கடந்த அக். 22-ம் தேதி அறிவித்தது. இதனிடையே, கடந்த அக். 23ம் தேதி பிரிக்ஸ் மாநாட்டில் 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் இரு தரப்பு பேச்சுவார்த்தையை நடத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தையில், எல்லையில் அமைதிக்கு முன்னுரிமை அளிக்க இருவரும் உறுதிபூண்டனர். இதனையடுத்து, கிழக்கு லடாக்கின் டெப்சாங் பகுதியில் உள்ள ‘ஒய்’ சந்திப்பு மற்றும் டெம்சோக்கில் உள்ள சார்டிங் நுல்லா சந்திப்பு பகுதிகளில் இருந்து இரு நாட்டு ராணுவ வீரர்களும் பின்வாங்கினர். மேலும், அந்த பகுதிகளில் இரு நாட்டு வீரர்கள் அமைத்திருந்த தற்காலிக கட்டுமானங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து ராணுவ வீரர்கள் விலக்கிக் கொள்ளப்பட்டாலும், சிறிது தொலைவில் முகாமிட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்தியா– சீனா எல்லையில் படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை நிறைவடைந்துவிட்டதை அடுத்து, தீபாவளியை முன்னிட்டு கிழக்கு லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தினரும் சீன ராணுவத்தினரும் இன்று (அக்.31) இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.

Tags :
DiwaliDiwali FestivalFesivalIndia - Chinanews7 tamilSweets
Advertisement
Next Article