Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பார்வையற்றோர் அணி" - பிரதமர் மோடி வாழ்த்து!

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
07:22 AM Nov 25, 2025 IST | Web Editor
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement

இலங்கை தலைநகர் கொழும்பில் பார்வையற்றோருக்கான முதலாவது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதில், இந்திய அணி, நேபாளத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "பார்வையற்றோருக்கான முதலாவது 20 ஓவர் உலகக் கோப்பையை வென்று சரித்திரம் படைத்த இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துகள். தொடரில் தோல்வியே சந்திக்காமல் கோப்பையை வென்ற விதம் பாராட்டுக்குரியது.

கடின உழைப்பு, கூட்டு முயற்சி, மனஉறுதிக்கு சான்றாக இந்த வெற்றி அமைந்துள்ளது. நீங்கள் ஒவ்வொருவரும் சாம்பியன்கள். இந்த அணியின் வருங்கால முயற்சி சிறப்பாக அமைய வாழ்த்துகள். இந்த சாதனை வருங்கால தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ChampionshipcongratulatesIndian Blind Teammodiprime ministerWins
Advertisement
Next Article