உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை..!
உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவின் குவான்ஜு நகரில் நடந்து வருகிறது. இப்போட்டியில் கலந்து கொண்ட இந்திய இளம் வீராங்கனை ஷீத்தல் தேவி (18 வயது) தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
இன்று நடந்த பெண்களுக்கான காம்பவுண்டு ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 சாம்பியனான துருக்கியை சேர்ந்த ஓஸ்நுர் குரே கிர்டியை ஷீத்தல் தேவி எதிர்கொண்டார். இதில் சிறப்பாக விளையாடிய ஓஸ்நுர் குரே கிர்டி -ஐ 146-143 என்ற கணக்கில் வீழ்த்தி ஷீத்தல் தேவி தங்கம் வென்றார்.
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த மாற்று திறனாளி வீராங்கனையான ஷீத்தல் தேவி இதற்கு முன் 2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் கலப்பு குழு கலவை பிரிவில் வெண்கலப் பதக்கம், 2023 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் ஆகியவற்றை வென்றுள்ளார். மேலும் பிபிசியின் (BBC) வளர்ந்து வரும் தடகள வீராங்கனை விருதையும் வென்றுள்ளார்.