Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஸ்பெயினில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த இந்திய தூதர்!

01:16 PM Jan 29, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக ஸ்பெயின் சென்றடைந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அந்நாட்டிற்கான இந்தியத் தூதர் தினேஷ் கே. பட்நாயக் தூதரக அதிகாரிகளோடு மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.

Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 நாட்கள் அரசுமுறை பயணமாக ஸ்பெயின் சென்றுள்ளார். அங்கு நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடுக்கு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளார். இந்நிலையில் ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலினை ஸ்பெயின் - தலைநகர் மேட்ரில் இந்திய தூதர் தினேஷ் கே.பட்நாயக் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். முதலமைச்சர் ஸ்டாலின் உடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, தொழில் துறை செயலாளர் அருண்ராய் உள்ளிட்டோர் இருந்தனர்.

ஸ்பெயினுக்கு விமானத்தில் செல்லும்போது முதலமைச்சர் ஸ்டாலின் உலகப் புகழ் பெற்ற டென்னிஸ் வீரரான ஜோகோவிச்சை (Novak Djokovic) சந்தித்துள்ளார். இந்த புகைப்படத்தை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் நடுவானில் நிகழ்ந்த ஆச்சரியம் என தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நடத்த உள்ளார். இம்மாநாட்டில் தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் பற்றியும், தமிழ்நாட்டின் கட்டமைப்பு வசதிகள், மனிதவள ஆற்றல் போன்றவற்றின் சிறப்பம்சங்களை விளக்கி, தமிழ்நாட்டில் முதலீடுகளை பெருமளவில் ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
CMO TamilNaduInvest In TNMK StalinNews7Tamilnews7TamilUpdatesSpainTamilNadu
Advertisement
Next Article