Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"அஜித்தை நடிகர் என்பதில் அடக்கிவிடமுடியாது" - அஜர்பைஜானில் உள்ள இந்திய தூதர் நெகிழ்ச்சி!

12:46 PM Jul 27, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் அஜித் குமார் உடனான சந்திப்பு குறித்து அஜர்பைஜானில் உள்ள இந்திய தூதர் ஸ்ரீதரன் மதுசூதனன் தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கி வரும் திரைப்படம் 'விடாமுயற்சி'. லைகா தயாரிக்கும் இந்த திரைகப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அஜர்பைஜானில் தொடங்கியது. இந்நிலையில், 30 நாட்களுக்கு மேல் அஜர்பைஜானில் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் நிறைவடைந்துள்ளதாக கடந்த 22ம் தேதி படக்குழு அறிவித்தது. இந்நிலையில், நடிகர் அஜித் குமார் உடனான சந்திப்பு குறித்து அஜர்பைஜானில் உள்ள இந்திய தூதர் ஸ்ரீதரன் மதுசூதனன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது :

"அஜர்பைஜானில் நடைபெற்ற 'விடாமுயற்சி' படப்பிடிப்பு நாட்களின்போது நடிகர் அஜித் ஒரு நாள் வீட்டுக்கு வந்திருந்தார். அவருடன் சக நடிகர்கள் ஆரவ், நிக்கில் வந்திருந்தார்கள். சில அஜர்பைஜான் தமிழ் நண்பர்களும் வந்தார்கள்.

ஒரு கைவிரல்களில் அடங்கிவிடக்கூடிய எண்ணிக்கையில்தான் அஜித்தின் திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், ‘அஜித் என்பவர் ஒரு நடிகர்’ என்கிற ஒற்றை விவரிப்பில் அவரை அடக்கிவிடமுடியாது என்பது எங்கள் உரையாடல்களின் சுவாரஸ்யத்தைக் கூட்டியது. குடும்பக் கதைகளும் சேர்ந்துகொள்ள, உணவும் சிரிப்பும் மகிழ்ச்சியுமாய் எல்லோரும் நள்ளிரவு தாண்டியும் பேசிக்கொண்டிருந்தோம்.

இதையும் படியுங்கள் : திருத்தப்பட்ட நீட் தேர்வு முடிவு வெளியீடு: முதலிடம் பிடித்தோர் எண்ணிக்கை 61-ல் இருந்து 17 ஆக குறைந்தது!

எங்களுடைய ஏதோ ஒரு குடும்ப நிகழ்ச்சி விவரிப்பின்போது அஜித் உட்பட எல்லோரும் குலுங்கிக்குலுங்கிச் சிரித்தபோது, வைதேகியும் நானும் எங்கள் உரையாடல்களுக்கு டிக்கெட் போடலாம் என்று அடிக்கடி எழும் எண்ணம் மீண்டும் வந்தது.  ஆர்வத்துக்காக ஒரு புது விஷயத்தைச் செய்துபார்ப்பதன் மகிழ்ச்சி, வாழ்வின் பல்வேறு கட்டங்களில் நம் மனநிலை மாறுவது, பைக், கார், சைக்கிள் பயணங்கள் என்று உடலும் மனமும் இணைந்து செயல்படும் தருணங்களின் அனுபவம் என்று இயல்பான போக்கில் போனது பேச்சு.

அஜித் விடைபெற்றுச் சென்றபிறகு பல சிந்தனைகள். மனிதர்கள் ஏன் பல விஷயங்களைச் செய்கிறார்கள்? அவர்களது ஊக்கம் எதைப் பற்றியது? இவற்றிலிருந்து அவர்களுக்கு என்ன கிடைக்கிறது? என் பதில்: ஆர்வத்தால் செய்யும் காரியங்களுக்குத் திடமான பலன்கள் எதுவும் தேவையில்லை.

ஒரு விஷயத்தை முயன்றுபார்த்து அனுபவித்திருக்கிறோம் என்பது போதாதா? கடைசியில் அதையும் மீறி எந்த விஷயத்தில் என்ன கிடைத்துவிடுகிறது? அவ்வளவு தான் வாழ்க்கை: அனுபவம்"

இவ்வாறு இந்திய தூதர் ஸ்ரீதரன் மதுசூதனன் தனது  சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Tags :
Actor Ajith KumarazerbaijanIndian AmbassadormeetSreedharan Madhusudhanan
Advertisement
Next Article