உலகம் முழுக்க இந்தியன் 2 திரைப்படம் வெளியானது - தமிழ்நாட்டில் FDFS காட்சிகள் காலை 9 மணிக்கு தொடக்கம்!
07:42 AM Jul 12, 2024 IST
|
Web Editor
இந்தியன் 2 சிறப்புக் காட்சியை திரையிட திரையரங்குகளுக்கு அனுமதி கோரி லைகா தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தமிழக அரசிடம் முறையிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு நிபந்தனைகளுடன் சிறப்புக் காட்சியை திரையிடுவதற்கு இன்று ஒருநாள் மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. காலை 9 மணிக்குதான் முதல் காட்சி தொடங்க வேண்டும் என்றும் நள்ளிரவு 2 மணிக்கு கடைசி காட்சியை முடித்துவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டை தவிர பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளில் இந்தியன் 2 திரைப்படத்தின் முதல்நாள் முதல் காட்சி திரையிடப்பட்டுள்ளது. இதனை கமல்ஹாசன் ரசிகர்கள் தங்களது டிவிட்டர் தளத்தில் பகிர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
உலகம் முழுக்க இந்தியன் 2 திரைப்படம் வெளியாகியுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டில் மட்டும் FDFS காட்சிகள் காலை 9மணிக்கு வெளியாக உள்ளது.
Advertisement
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றி திரைப்படம் “இந்தியன்”. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இதில் சமுத்திரகனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், விவேக், எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.
Next Article