Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'இந்தியன் 2' இசை வெளியீட்டு விழா எப்போது?

07:32 PM May 19, 2024 IST | Web Editor
Advertisement

‘இந்தியன் 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவலை படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றி திரைப்படம் “இந்தியன்”. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சமுத்திரகனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'இந்தியன் 2' திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் புரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் பெங்களூருவில் நேற்று (மே 18) நடைபெற்ற சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியின்போது, ஆரம்ப கட்ட புரமோசன் நிகழ்ச்சியில், ‘உலகநாயகன்’ கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் கலந்துகொண்டு 'இந்தியன் 2' குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டனர்.

இதையும் படியுங்கள் : அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது ‘Good Bad Ugly’ - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவிப்பு!

'இந்தியன் 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக நடைபெறவுள்ளதாக தெரிவித்தனர். மேலும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் ‘இந்தியன் 3’ படம் திரைக்கு வரும் என்றும் தகவல் தெரிவித்தனர்.  'இந்தியன் 2'  திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12-ம் தேதி வெளியாகும் என்றும், மே 22-ம் தேதி முதல் பாடல் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
anirudhindian2KamalhaasanLycaproductionMovieUpdatesPromotionshankar
Advertisement
Next Article