Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

`இந்தியன் 2' படத்தின் நீளம் 12 நிமிடங்கள் குறைப்பு - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

04:39 PM Jul 17, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியன்  2 படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.

Advertisement

இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் ஜூலை 12 அன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.

லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளாலும் வசூல் ரீதியான வெற்றியைப் பெற்று வருகிறது.இப்படம் உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலைக் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியன் - 2 படக்குழு படத்தின் நீளத்தைக் குறைத்துள்ளனர். ரசிகர்களுக்கு சோர்வை ஏற்படுத்திய பகுதிகள் உள்பட 11.51 நிமிடக் காட்சிகளை நீக்கி புதிய வடிவத்தை உருவாக்கியுள்ளனர். இந்த புதிய வடிவம், இன்று முதலே திரையரங்குகளில் வெளியாயுள்ளது.

 

Tags :
anirudhIndian 2Kamal haasanLyca Productionmovieshankar
Advertisement
Next Article