Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்தியன் -2 ‘காலண்டர்’ பாடல் வெளியானது!

07:47 PM Jul 01, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியன்-2 படத்தின் காலண்டர் பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Advertisement

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றி திரைப்படம் “இந்தியன்”.  இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இதில் சமுத்திரகனி,  பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இத்திரைப்படம் வரும் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் படத்தின் புரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இந்தியன்-2 படத்தின் டிரைலர் மற்றும் 3 பாடல்களின் வீடியோக்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதாமாக நாளுக்கு நாள் ஒரு அப்டேட் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் படத்தின் ‘காலண்டர்’ பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

அதன்படி பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கபிலன் வைரமுத்து எழுதிய இப்பாடலை சுவி மற்றும் ஐஸ்வர்யா சுரேஷ் ஆகியோர் பாடியுள்ளனர்.

Tags :
calendar songIndian 2Kamal haasanLyca Productionsshankar
Advertisement
Next Article