Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

28 ஆண்டுகளுக்கு பிறகு ரீரிலீஸ் ஆகும் 'இந்தியன்1'!

09:41 PM May 26, 2024 IST | Web Editor
Advertisement

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 1 திரைப்படம் வருகிற ஜூன் 7ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

கடந்த 1996ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் 'இந்தியன்'.  இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ஒரு விழிப்புணர்வு நிறைந்த அதிரடி திரைப்படமாகும். இதில் நடிகர் கமல்ஹாசன் 'சேனாபதி' என்ற வயதான சுதந்திரப் போராட்ட வீரராக நடித்தார். ஊழலுக்கு எதிராக போராடிய சேனாதிபதி இந்தியாவை விட்டு ஓடிப்போய் ஹாங்காங் செல்வதுடன், ஊழல் எப்போதாவது திரும்பினால் திரும்பி வருவேன் என்று மிரட்டுவதுடன் 'இந்தியன்' முதல் பாகம் முடிந்தது.

இந்நிலையில் தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு 'இந்தியன் 2' திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. 'இந்தியன் 2' திரைப்படம் இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ள நிலையில், வரும் ஜூலை 12ம் தேதி வெளியாக தயாராகவுள்ளது. இந்த திரைப்படத்தின் முதல் பாடலான 'பாரா' சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதையும் படியுங்கள் : நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார்! கொளத்தூர் மணி கடிதம்!

'இந்தியன் 2' திரைப்படம் வெளியாகும் நிலையில் இந்த திரைப்படத்தின் பாகம் 1 ரிரீலிஸ் செய்வதற்கு படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 'இந்தியன்' திரைப்படம் வரும் ஜூன் 7ம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகவுள்ளது. 28 ஆண்டுகளுக்கு பிறகு ரிரீலிஸ் செய்யப்படும் இத்திரைப்படத்தை பார்க்க ரசிகர்களிடையே ஆர்வம் உருவாகியுள்ளது.

 

Tags :
இந்தியன்1இந்தியன்2directorindian2kamalKamalhaasanLycaRed Giant Moviesshankar
Advertisement
Next Article