Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

2023-24ம் நிதியாண்டில் 10,931 கோடி டாலராக உயர்ந்த பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி!

12:20 PM Apr 23, 2024 IST | Web Editor
Advertisement

முக்கிய சந்தைகளில் மந்தநிலை நிலவிய சூழலிலும், கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 10,931 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

Advertisement

சர்வதேச பதற்ற நிலையால் சில முக்கிய சந்தைகளில் மந்தநிலை நிலவிய சூழலிலும், கடந்த 2023-24 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 10,931 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது குறித்து பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"2023 ஏப்ரல் முதல் 2024 மார்ச் வரையிலான நிதியாண்டில் நாட்டின் பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 10,931 கோடி டாலராக அதிகரித்துள்ளது. முந்தைய 2022-23 ஆம் நிதியாண்டில் இது 10,704 கோடி டாலராக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் நாட்டின் பொறியியல் பொருள்களின் ஏற்றுமதி 2.13 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. காஸா மற்றும் உக்ரைன் போர் காரணமாக முக்கிய ஏற்றுமதி சந்தைகளில் கடந்த நிதியாண்டு மந்தநிலை நிலவியது.

இதையும் படியுங்கள் : பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழக – கேரள எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

அத்தகைய சவால்களை சமாளித்து இந்தியாவின் பொறியியல் பொருள்களின் ஏற்றுமதி இந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்திய பொறியியல் பொருள்களின் தரம் உலகளவில் போட்டியிடும் தன்மையுடன் இருப்பதால், வரும் ஆண்டுகளிலிலும் இந்த வளர்ச்சிப் போக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 2030-ஆம் ஆண்டுவாக்கில் அந்தப் பொருள்களின் ஏற்றுமதி மதிப்பு 30,000 கோடி டாலராக உயரும் என்றும் இதன் மூலம் நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் அந்நியச் செலாவணி வருவாய் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் பொறியியல் பொருள்களின் பங்களிப்பு 24 சதவீதமாக உள்ளது. இதன் மூலம், நாட்டின் ஏற்றுமதியில் இந்தத் துறை மிகப் பெரிய பங்களிபை வழங்குகிறது"

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
engineering goodsexportsfinancial yearIncreaseIndiaMarkets
Advertisement
Next Article