Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#INDvsBAN | முதல் டி20போட்டி : வங்கதேச அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி!

06:46 AM Oct 07, 2024 IST | Web Editor
Advertisement

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

Advertisement

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என முழுமையாக வென்றது. டி20- தொடர் இந்தநிலையில் இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நேற்று இரவு குவாலியரில் உள்ள மைதானத்தில் தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 19.5 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மெஹதி ஹாசன் 35 ரன்களும், கேப்டன் ஷண்டோ 27 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். 2021-ம் ஆண்டுக்கு பின்னர் இந்திய அணிக்குத் திரும்பிய தமிழ்நாட்டை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர், ஹார்திக், மயாங் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையும் படியுங்கள் : நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு | #Tenkasi அருகே சோகம்…

20 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 1 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரியுடன் 16 ரன்களுக்கு தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். அடுத்துவந்த இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவும் அதிரடியைத் தொடர ஸ்கோர் எகிறியது. சூர்யகுமார் யாதவ் 29 ரன்களுக்கு வெளியேறினார். நிதானமாக ரன் சேகரிப்பில் ஈடுபட்ட விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனும் 29 அவுட்டானார்.

இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்துவைத்தார். நிதீஷ் குமார் 16 ரன்களுடனும், ஹார்திக் பாண்டியா 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 11.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து இந்திய அணி 7 விக்கெட்டு வித்தியாசத்தில் முதல் வெற்றியைப் பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Tags :
BangladeshBANvsINDIndiaINDVsBANNews7Tamilnews7TamilUpdatesT20wicketswon
Advertisement
Next Article