Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆசிய துப்பாக்கி சுடுதலில் இரட்டை தங்கம் வென்ற இந்தியா!

12:51 PM Jan 15, 2024 IST | Web Editor
Advertisement

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில்,  நடைபெற்று வரும் பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான ஆசிய தகுதி சுற்றில்,  இந்தியா இரட்டை தங்கம் பெற்று  பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Advertisement

பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான ஆசிய தகுதி சுற்று இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வருகிறது.  இதில், ஆண்களுக்கான தனிநபர் 25 மீ., 'ஸ்டேன்டர்டு பிஸ்டல்' பிரிவு பைனலில் 572 புள்ளிகள் பெற்று, இந்தியாவைச் சேர்ந்த யோகேஷ் சிங் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.  மற்ற இந்திய வீரர்களான அமித் குமார் ஆறாவது இடத்தையிம், ஓம் பிரகாஷ்12வது இடத்தையும் பெற்றனர்.

மேலும் ஆண்கள் அணிகளுக்கான 25 மீ., ஸ்டேன்டர்டு பிஸ்டல்' பிரிவில் யோகேஷ் குமார், அமித் குமார், ஓம் பிரகாஷ் அடங்கிய இந்திய அணி 1690.34 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றது. அடுத்த இரண்டு இடங்களை வியட்நாம் மற்றும் இந்தோனேஷியா கைப்பற்றி உள்ளன. ஏற்கனவே நடைபெற்ற மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் நான்சி 252.8 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் பெற்றது குறிப்பிடதக்கது. இதனைத் தொடர்ந்து, இதுவரை 14 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலம் என, 32 பதக்கங்களை பெற்று இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சீனா இரண்டாம் இடத்திலும், தென்கொரியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.

Advertisement
Next Article