Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆசிய கிரிக்கெட் தொடர்களிலிருந்து இந்தியா விலகல்!

மகளிர் ஆசிய கோப்பை உட்பட ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் அனைத்து வகையான தொடர்களிலிருந்தும் விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
11:30 AM May 19, 2025 IST | Web Editor
மகளிர் ஆசிய கோப்பை உட்பட ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் அனைத்து வகையான தொடர்களிலிருந்தும் விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
Advertisement
அண்மைக்காலமாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், மகளிர் ஆசிய கோப்பை உட்பட இனி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் அனைத்து வகையான தொடர்களிலிருந்தும் விலக பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
அடுத்த மாதம் இலங்கையில் நடைபெற உள்ள மகளிர் ஆசியக் கோப்பை தொடரிலிருந்து இந்தியா விலகுவதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு பிசிசிஐ தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தற்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான மொஹ்சின் நக்வி தலைமை தாங்குகிறார். இதுதான் இந்தியாவின் விலகலுக்கு காரணமாக உள்ளது.
“இது நாட்டின் உணர்ச்சி என்றும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் இருக்கும்போது அதில் தங்களால் விளையாட முடியாது” என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில், இலங்கை அணியை வீழ்த்தி, இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Tags :
Asian Cricket CouncilIndiapakistanPakistan Cricket Board
Advertisement
Next Article