"வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா நீடிக்கும்" - உலக வங்கி கணிப்பு
உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"இந்தியாவின் பொருளாதாரம் வலுவான உள்நாட்டுத் தேவையாலும், முதலீடுகளின் எழுச்சி மற்றும் வலுவான சேவை நடவடிக்கைகளாலும் உற்சாகமடைந்துள்ளது. இது 2024 முதல் 2026 வரை ஒரு நிதியாண்டில் சராசரியாக 6.7 சதவிகிதம் வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவை உலகின் மிக வேகமாக வளரும் பிராந்தியமாக மாற்றுகிறது. உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும்.
இந்தியாவை உள்ளடக்கிய தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024-26 ல் சராசரியாக சுமார் 3 சதவீதமாக வளரும். இது 2010-19 ன் சராசரியை விட மிகக் குறைவு. இந்தியா போன்ற சில பெரிய வளர்ந்து வரும் சந்தை மற்றும் வளரும் பொருளாதாரங்கள், தனிநபர் வளர்ச்சியைத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.