Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா ஜனநாயக நாடாக இருக்காது" - மதுரையில் பிரகாஷ் காரத் பேச்சு!

07:53 PM Apr 06, 2024 IST | Web Editor
Advertisement

"மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா ஜனநாயக நாடாக இருக்காது"  என மதுரையில் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.  ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து,  வேட்பாளர்களை அறிவித்து,  தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.  வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தல் பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் மதுரை மற்றும் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறது. அ தேபோல கேரள மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் அக்கட்சி இந்திய அளவில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும் கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் தனித்தே களம் காண்கிறது.

இந்த நிலையில் டெல்லியில் கடந்த வியாழக் கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.  இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி,  மூத்த தலைவர்களான பிரகாஷ் காரத், பிருந்தா காரத் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.

இந்த தேர்தல் அறிக்கையில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும்.  மக்களவையில் சிபிஐ(எம்) மற்றும் இடதுசாரி கட்சிகளின் பலத்தை அதிகரிக்க வேண்டும்,  மத்தியில் மாற்று மதச்சார்பற்ற அரசாங்கம் அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட  முக்கிய அம்சங்கள்  இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றன.

இந்த நிலையில் மதுரை நாடாளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் மதுரையில் வாக்கு சேகரித்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் தெரிவித்ததாவது..

” பாஜக மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினால் இந்தியா ஜனநாயக நாடாக இருக்காது. தேர்தல் தேதி அறிவித்த பிறகு இரண்டு மாநில முதலமைச்சர்களை  பாஜக அரசு கைது செய்துள்ளது.  அதில் ஒருவர் ஜெஜ்ரிவால், மற்றொருவர் ஹேமந்த்சோரன் . தேர்தல் பயம் காரணமாக பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள்.

மத்திய  அரசின் விசாரணை முகமைகளை பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர்களை அச்சுறுத்தி வேட்டையாடி சிறையில் அடைத்து துன்புறுத்துகிறார்கள். தேர்தல் பிரச்சாரம் நடத்திக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளை கொள்கை ரீதியாக பாஜக மோதுவது இல்லை. கட்சிகளையும், தலைவர்களையும் முடக்குவதற்கு செயலற்று போவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சியின் வங்கி கணக்கை முடக்கி, வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி இடையூறு செய்கின்றனர். அரசியலாக கொள்கை அடிப்படையில் பாஜக தேர்தலை சந்திக்கவில்லை. கட்சிகளின் தலைவர்களை முடக்கி செயல்படவிடாமல் தடுத்து இந்த தேர்தலை பாஜக சந்திக்கின்றனர். பாஜக நாடாளுமன்ற மரபுகளை காலில் போட்டு மிதிக்கிறது.

156 எதிர்க்கட்சி எம்பிக்களை இடைநீக்கம் செய்தனர். எதிர்க்கட்சி எம்பிகள் அவையில் இல்லாத நிலையை உருவாக்கினர். சாதகமாக பேசினால் அனுமதிப்போம், மக்களுக்காகவோ அரசுக்கு எதிராகவோ பேசினால் அவையை விட்டு வெளியேற்றுவோம் என்ற அடிப்படையில் செயல்படுகின்றனர். CBI , ED ,  வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகளை கைப்பாவையாக வைத்து தங்கள் அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் இருப்பது முழு ஜனநாயகமல்ல, பாதி ஜனநாயகம் தான் உள்ளது. மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் உள்ள பாதி  ஜனநாயகமும் வழித்தெடுக்கப்பட்டு ஜனநாயகமற்ற நாடாக மாறிவிடும்” என பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Next Article