Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அமெரிக்காவின் 50% வரிவிதிப்பால் இந்தியாவுக்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் - மல்லிகார்ஜூன கார்கே!

அமெரிக்காவின் 50% வரிவிதிப்பால் இந்தியாவுக்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
04:03 PM Aug 27, 2025 IST | Web Editor
அமெரிக்காவின் 50% வரிவிதிப்பால் இந்தியாவுக்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
Advertisement

அமெரிக்காவின் 50% வரிவிதிப்பால் இந்தியாவுக்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

”பிரதமர் மோடி,  உங்கள் நண்பரான் டிரம்பின் அரசு  இன்று முதல் இந்தியாவில் 50% வரிகளை விதித்துள்ளார். இந்த வரி விதிப்பால் நாம் 10 துறைகளில் மட்டும் ₹2.17 லட்சம் கோடியை இழப்போம்.

நமது விவசாயிகள், குறிப்பாக பருத்தி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளை பாதுகாக்க எந்த "தனிப்பட்ட விலையையும்" கொடுக்கத் தயாராக இருப்பதாக நீங்கள் கூறியிருந்தீர்கள், ஆனால் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நீங்கள் எதுவும் செய்யவில்லை.

உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முயற்சி (GTRI) அமைப்பனது  நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 1% பாதிக்கப்படலாம் என்றும், சீனா பயனடையும் என்றும் கூறுகிறது. MSMEகள் உட்பட பல ஏற்றுமதி சார்ந்த முக்கியமான துறைகள் பெரிய  வேலை இழப்புகளைச் சந்திக்க உள்ளது.

இந்திய ஜவுளி ஏற்றுமதித் துறை நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு உட்பட சுமார் 500,000 வேலை இழப்புகளை எதிர்கொள்கிறது. ரத்தினக் கற்கள் மற்றும் நகைத் துறையில், வரிகள் தொடர்ந்தால் 150,000 முதல் 200,000 வேலைகள் ஆபத்தில் இருக்கக்கூடும். 10% அடிப்படை அமெரிக்க வரி அமல்படுத்தப்பட்ட ஏப்ரல் மாதத்திலிருந்து, சௌராஷ்டிரா பிராந்தியம் முழுவதும் வைர வெட்டு மற்றும் பாலிஷ் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 1,00,000 தொழிலாளர்கள் ஏற்கனவே வேலை இழந்துள்ளனர். அரை மில்லியன் இறால் விவசாயிகளின் வாழ்வாதாரம் நேரடியாகவும், மேலும் 2.5 மில்லியன் மறைமுகமாகவும் பெரும் ஆபத்தில் உள்ளது.

ஒரு வலுவான வெளியுறவுக் கொள்கைக்கு  திறமை தேவை. ஆனால் உங்கள் மேலோட்டமான வெளியுறவுக் கொள்கையனது எங்கள் நலன்களைப் பாதித்துள்ளன. ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை   அடைவதில் நீங்கள் தோல்வியடைந்தீர்கள். இப்போது நீங்கள் எங்கள் நாட்டைப் பாதுகாக்கவும் தவறிவிட்டீர்கள்”

என்று தெரிவித்துள்ளார்.

Tags :
latestNewsMalligarjunKhargemoditrumpteriffs
Advertisement
Next Article