உலகக்கோப்பையை இந்தியா நிச்சயம் வெல்லும் - நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!
அரையிறுதிப்போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியை கண்டுவிட்டு, சென்னை திரும்பிய ரஜினிகாந்த் நூறு சதவீதம் இந்தியா உலகக்கோப்பையை வெள்ளும் என தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் முதல் ஆட்டமாக இந்திய அணி மற்றும் நியூசிலாந்து பங்கேற்ற போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி சிறப்பான துவக்கத்தை கொடுத்தது.
அதனை தொடர்ந்து, உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. இந்தப் போட்டியை நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோர் நேரடியாக கண்டு களித்தனர்.
இந்நிலையில் அரையிறுதி போட்டியை பார்க்க சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் மும்பையில் இருந்து விமானம் இன்று மாலை சென்னை வந்தடைந்தார். அப்போது நடிகர் ரஜினிகாந்த் வருவதை அறிந்த ரஜினியின் தீவிர ரசிகைகளலான 11 வயதுடைய ஹாசினிகா மற்றும் அவரது தங்கை 9,வயதுடைய லட்சுமி ஸ்ரீ இருவரும் ரஜினிகாந்த்துக்கு ரோஜா பூ கொடுத்து புகைப்படம் எடுத்து கொண்டனர். பல நாள் கனவு இன்று நிறைவேறியதால் குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் நூறு சதவிகிதம் கப்பு நமதே, நூறு சதவீதம் அரையிறுதியில் வென்றதற்கு சமி தான் காரணம் என கூறிவிட்டு சென்றார்.