Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

2047-ல் இந்தியா வல்லரசு நாடாக மாறும்! - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை

10:43 AM Feb 28, 2024 IST | Jeni
Advertisement

20247 ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசு நாடாக மாறும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.17,300 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் சர்பனந்தா சொனோவால், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம், பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை கொண்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டிற்கு ரூ.11 லட்சம் கோடி திட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதையும் படியுங்கள் : திமுக - விசிக இடையே 2ம் கட்ட பேச்சுவார்த்தை - தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்பு!

தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சியடைந்த மாநிலமாக மாறியுள்ளதாக கூறிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், 2047 ஆம் ஆண்டில் உலகளவில் இந்தியா வல்லரசு நாடாக மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தார்.

Tags :
LmuruganNarendramodiPMOIndiaPORTThoothukudiVOC
Advertisement
Next Article