இந்தியா Vs தென்னாப்பிரிக்கா - மழையால் ரத்தான முதல் டி20 போட்டி!
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியுடம் விளையாடுகிறது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டர்பனில் நேற்று (டிசம்பர் 11) நடைபெற இருந்த நிலையில், டர்பனில் இடைவிடாது மழை பெய்ததால் டாஸ் வீசுவதில் தாமதம் ஏற்பட்டது.
மேலும் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக, முதல் டி20 போட்டி கைவிடப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியானது டாஸ் கூட வீச முடியாத நிலையில் ரத்தானது இந்திய ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. இந்த தொடரின் இரண்டாவது டி20 போட்டி நாளை(டிச.12) கெபெர்ஹாவில் நடைபெற உள்ளது.
மேலும் இந்த சுற்றுப்பயணம் வரும் ஜனவரி 7ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில் மூன்று வித ஃபார்மெட்டுகளுக்கும் மூன்று கேப்டன்கள் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.