Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான்; இதை நிஜமாக்க பாகிஸ்தான் என்ன செய்ய வேண்டும்?

07:31 PM Nov 08, 2023 IST | Web Editor
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறு விறுப்பான தருணத்தை எட்டியுள்ளது. கிளைமாக்ஸ் கட்டத்தில் நெயில் பைட்டர் போட்டிகள் சிலவும் அவ்வப்போது நடந்து கொண்டு இருக்கின்றன. இதற்கிடையே நம்பிக்கை... அதானே எல்லாம் என்கிற பாணியில் 'Host Country' ஆக இருக்கும் இந்தியா புள்ளி பட்டியலில் ராஜா பகதூர் போல வாட்டமாக முதல் இடத்திற்கு முன்னேறி முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

Advertisement

ஆரம்பம் முதலே அதிரடி காட்டிவந்த தென்னாப்பிரிக்கா அணி, இரண்டாவது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்று, இந்த முறையாவது தாங்கள் வந்த வேலை நிறைவேறும் என்ற நம்பிக்கையில் விளையாடி வருகிறது. அடுத்ததாக எந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்ற கியூரியாசிட்டி இருந்து வந்த நிலையில், ஒன் மேன் ஆர்மி மேக்ஸ்வெல்லின் அதிரடியால், ஆப்கானை வீழ்த்தி மூன்றாவது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா.

ஆனால் நான்காவது இடத்தை பிடித்து, அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான ரேசில் மூன்று அணிகள் அடுத்தடுத்து காத்திருப்பது இந்த தொடரில் மேலும் சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கிறது. நான்காவது இடம் அவ்வளவு சுலபமா என்ன?

ஒருபுறம் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கா அணி, மூன்றாம் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் சந்திப்பது உறுதியாகிவிட்டது. ஆனால் முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவுடன் அரையிறுதியில் மோத உள்ள அந்த அணி எவ்வளவு அழுத்தத்துடன் 4-ம் இடத்திற்கான போராட்டத்தில் களமிறங்க வேண்டும் தெரியுமா...

ஹோம் அட்வாண்டேஜ், ஃபார்மில் உள்ள அணி, டாப் ஆர்டர்களின் அதிரடி, பந்துவீச்சில் மிராக்கில் என ஒவ்வொன்றிலும் கலக்கும் இந்திய அணிக்கு எதிராக, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் என அந்த அணி களமிறங்கினாலும் அது சற்று கடினம் தான். மேலும் ஒரு அழுத்தமான போட்டியாகவே அரையிறுதி அமையக்கூடும். ஆனால் இந்த மூன்று அணிகளுக்கான வாய்ப்பு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா?

நான்காவது இடத்திற்கு போட்டியிடும் நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மீதமிருக்கும் ஒரு போட்டியில் பெரிய பலப்பரீட்சை மேற்கொண்டால் மட்டுமே யாராவது ஒருவர் 4வது இடத்தை அடைய முடியும். மூன்று அணிகளும் 8 புள்ளிகளுடன் அடுத்தடுத்து இருப்பதால் மூவருக்குமான வாய்ப்பு இதில் சாத்தியம்.முதலாவதாக 4 வது இடத்தில் தொடர்ந்து வரும் நியூசிலாந்து அணியின் வாய்ப்பு குறித்து பார்க்கலாம்...

நியூசிலாந்து அணி 8 போட்டிகளில் விளையாடி, 4ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்து 8 புள்ளிகளுடன் இருக்கிறது. நியூசிலாந்தின் நெட் ரன் ரேட் 0.398 புள்ளிகளாக இருக்கிறது. நியூசிலாந்து இதே 4 ஆம் இடத்தை தக்க வைத்துக் கொள்ள நிச்சயம் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நல்ல நெட் ரன் ரேட் விகிதத்தில் வெற்றி பெற்றாக வேண்டும். அப்போது தான், இங்கிலாந்தை எதிர்கொள்ளும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாலும் கூட ரன் ரேட் விகிதத்தில் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும்.

ஒரு வேளை நியூசிலாந்து, வெறும் வெற்றி மட்டுமே பெற்றால் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நல்ல நெட் ரன் ரேட் விகிதத்தில் வெற்றி பெற நேரும் போது பாகிஸ்தானுக்கான வாய்ப்பு மட்டுமே அதிகரிக்க கூடும். பாகிஸ்தனின் தற்போதைய ரன் ரேட் 0.036 ஆக இருக்கிறது. அதே போல நியூசிலாந்து அணி இலங்கைக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தாலும், பாகிஸ்தானுக்கு வெறும் வெற்றி மட்டுமே போதுமானதாக அமையும். ஏனெனில் நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது 90 சதவிகிதம் மழைக்கு வாய்ப்பு இருப்பதால், இரு அணிகளுக்கு தலா 1 புள்ளி வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.

அதே சமயம், இலங்கை அணிக்கும், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதி பெற முடியும். ஆனால் இரு அணிகளின் வெற்றி, தோல்வியை சார்ந்து தான் ஆப்கானிஸ்தான் அணிக்கான வாய்ப்பு இருக்கிறது. முதலில் ஆப்கானிஸ்தான் தென்னாப்பிரிக்கா அணியை நல்ல ரன் ரேட்டில் வீழ்த்திட வேண்டும், அப்போது தான் ஒரு கரையை கடக்கும். அதன் பிறகு பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் தோல்வி அடைந்தால் மட்டுமே ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
ஆனால் நியூசிலாந்து, பாகிஸ்தான் என இரு அணிகளும் வெற்றி பெற்று, ஆப்கானிஸ்தானின் ரன் ரேட் விகிதத்தில் மாற்றம் நிகழுமானால் அந்த அணி நேரடியாக 4வது இடத்துக்கு முன்னேறி அரையிறுதி வாய்ப்பை பெறும். இந்திய அணியை நவம்பர் 15 ஆம் மும்பை வான்கடே மைதானத்தில் முதலாவது அரையிறுதியில் சந்திக்க கூடும்.
வாய்ப்புகள் எல்லாம் ஒருபுறம் பிரகாசமாக இருந்தாலும் இந்த உலகக் கோப்பை தொடரும் திருப்தியான அரையிறுதி போட்டிகளை காண்பிக்க காத்திருக்கிறது.

ஒருவேளை எல்லா வாய்ப்புகளிலும் லக் ஒன்றை வைத்து பாகிஸ்தான் அணி நான்காவது இடத்தை பிடித்து விட்டால் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத கூடும். இந்த போட்டி முன்கூட்டியே திட்டமிடப்படாததாக இருந்தாலும், ஒருவேளை அப்படி நடந்தால் அது நிட்சயம் வியாபர நோக்கத்திலான மற்றும் அரசியல் தலையீடுகள் இல்லாத ஒரு இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியாக இருந்திட வேண்டும் என்பது தான் ரசிகர்களின் உண்மையான வேண்டுகோளாக இருக்கும்... முடிவுகளுக்கு காத்திருப்போம்...

Tags :
afghanistanAustraliaCricket WorldCupCricket WorldCup 2023ICC WorldCup 2023IndiaIndVsPakNews7TamilNews7TamilSportsnews7TamilUpdatesnewzealandpakistanPAKvsINDSouth Africa
Advertisement
Next Article