முதல் போட்டியில் வங்கதேசத்தை துவம்சம் செய்த இந்தியா - ஷமி அபாரம்.., கில் அசத்தல்!
8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) தொடர் பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. கராச்சியில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.
இதன்படி போட்டியின் தொடக்கத்தில் டாஸ் போடப்பட்டது. டாஸை வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக தன்சித் ஹசனும் சௌமியா சர்காரும் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய இந்திய நட்சத்திர பந்துவீச்சாளர் முகமது ஷமி தனது 6வது பந்தில் சர்காரின் விக்கெட்டை வீழ்த்தி வங்கதேச அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தவ்ஹீத் ஹிர்தாய் நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டு சதம் விளாசி அசத்தினார். இதேபோல அடுத்தடுத்த வந்த ஜாகேர் அலியும் 68ரன்கள் எடுத்து அணிக்கு பக்கபலம் சேர்த்தார். இறுதியாக 49.4 ஓவரில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 228ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு 229ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.
எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் துவக்கத்திலேயே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அதிரடியாக விளையாடிய அணியின் கேப்டன் ரோஹித் 41ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து கில்லுடம் ஜோடி சேர்ந்த விராட் கோலி 22 ரன்களுக்கும், ஸ்ரேயஷ் ஐயர் 15ரன்களுக்கும், அக்சர் படேல் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்திய அணியில் முகமது ஷமியின் அசத்தல் பந்துவீச்சில் வங்கதேச அணியின் 5விக்கெட்கள் சரிந்தன. இதன்மூல ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்களை வீழ்த்தி முகமது ஷமி சாதனை படைத்தார். இதேபோல ஹர்ஷித் ராணா 3விக்கெட்களும் அக்சர் படேல் அடுத்தடுத்து 2 விக்கெட்களையும் எடுத்து அசத்தினர்.