Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்தியா - தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டிகள்: முகமது ஷமி, தீபக் சாஹர் திடீர் விலகல்!

12:16 PM Dec 16, 2023 IST | Web Editor
Advertisement

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணியின் ஒருநாள் போட்டிகள் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், தீபக் சாஹர் விலகியுள்ளார்.

Advertisement

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 T20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடந்த டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. இந்தியா, தென்னாப்பிரிக்கா மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்குகிறது.

இந்நிலையில், ஒருநாள் போட்டிக்கான தொடரில் இருந்து தீபக் சாஹர் திடீரென விலகியுள்ளார். அவர் தனது சொந்த காரணமாக விலகியுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. எனவே, அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேபோல், டெஸ்ட் தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையின் முடிவில் அவர் நீக்கப்பட்டுள்ளார் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள்:

Tags :
BCCIDeepak Chaharind vs saIndiaMohammed ShamiNews7Tamilnews7TamilUpdatesodiSouth AfricaTest Cricket
Advertisement
Next Article