Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்” - ஏஆர். ரஹ்மான்!

10:11 PM Nov 17, 2024 IST | Web Editor
Advertisement

லீ மஸ்க் மெய்நிகர் (விர்சுவல் ரியாலிட்) படத்தை இயக்கியதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு சென்னை ஐஐடி விருது வழங்கி கௌரவித்துள்ளது.

Advertisement

சென்னை ஐஐடியின் இந்த ஆண்டிற்கான XTIC எனும் ஆராய்ச்சி விருதை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பெற்றார். 2022 ஆம் ஆண்டு வெளிவந்த லீ மஸ்க் திரைப்படத்திற்கான மெய் நிகர் தொழில்நுட்பம் விருதை இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் பெற்றார். சர்வதேச அளவில் ஏஆர் ரஹ்மான் பல விருதுகளை பெற்றிருந்தாலும் கல்வி நிறுவனம் சார்பில் தரப்படும் விருது என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.

சென்னை ஐஐடி பேராசிரியர் மணிவண்ணன் தலைமையிலான குழுவினர் ஏ.ஆர் ரஹ்மானுக்கு
இந்த வருடத்திற்கான சென்னை ஐஐடியின் அனுபவமிக்க தொழில்நுட்ப கண்டுபிடிப்பு
மையத்தின் விருதை வழங்கினர். அதன்பின்னர் 5 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில்
ஆறு வருடமாக, பலவிதமான தொழில்நுட்ப சிக்கலுக்கு மத்தியில் எடுக்கப்பட்ட லீ
மஸ்க் மெய் நிகர் தொழில்நுட்ப திரைப்படம் குறித்து ஏஆர் ரஹ்மான் உரையாடினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏஆர் ரஹ்மான்,

உலகத்திற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படத்திற்காக, நான் பிறந்த ஊரில்
விருது வாங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மெய்நிகர் தொழில் நுட்பத்தால் 37 நிமிட படம் பார்த்தவர்கள், 10 நிமிடம் படமா என கேட்டனர். புதிய தொழில்நுடபம் என்பதால் அனைவரும் ரசித்தனர். ஏன் அடுத்த மைக்ரோசாப்ட்டோ, ஆப்பிளோ இந்தியாவில் இருந்து வர கூடாது.

நமது நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம். புதிய தொழில்நுட்பம் இந்தியாவில் இருந்து உருவாக வேண்டும். இந்தியாவில் VR மூலமாக கோயில்களை சுற்றி பார்க்கலாம். கல்யாண நிகழ்ச்சியை உணர்வு பூர்வமாக ரசிக்கலாம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. நாம் அதில் கவனம் செலுத்த வேண்டும்.

கற்பனைக்கு கட்டுப்பாடுகள் கிடையாது. இசை மூலம் மனித சிகிச்சை அளிப்பது குறித்தான ஆராய்ச்சி நடந்து வருகிறது” என தெரிவித்தார்.

Tags :
ChennaiiitXTIC Award
Advertisement
Next Article