Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாலஸ்தீனத்துக்கு 30 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது #India!

08:33 AM Oct 23, 2024 IST | Web Editor
Advertisement

போரால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் 30 டன் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது.

Advertisement

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் மோதலையடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த போரில் பாலஸ்தீனம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே காஸாவின் குடியிருப்புப் பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஒவ்வொரு தாக்குதலின் போதும் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்து வருகின்றனர். இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு ஐ.நா. பலமுறை கண்டனம் தெரிவித்தும் காஸாவில் குடியிருப்புப் பகுதிகள் மீதான தாக்குதல் தொடர்ந்தே வருகிறது. இதனால் மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையி்ல் மனிதாபிமான அடிப்படையில் 30 டன் நிவாரணப் பொருட்களை பாலஸ்தீனத்துக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இதில்,மருந்துகள், அறுவை சிகிச்சைபொருட்கள், பல் மருத்துவத்துக்கான மருந்துகள், பொது மருத்துவ பொருட்கள் மற்றும் அதிக எனர்ஜி கொண்ட பிஸ்கெட்டுகள் உள்ளிட்டவை அடங்கும். பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரண மற்றும் வேலை முகமை (யுஎன்ஆர்டபிள்யூஏ) மூலம் இந்தியாவின் நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில் “பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்களை யுஎன்ஆர்டபிள்யூஏ மூலம் இந்தியா அனுப்பியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Humanitarian AidIndiaPalestineRelief materials
Advertisement
Next Article