Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கனடாவிற்கான தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்றது #India!

09:56 PM Oct 14, 2024 IST | Web Editor
Advertisement

கனடாவுக்கான இந்திய தூதரையும், இதர தூதரக அதிகாரிகளையும் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Advertisement

கனடாவில் சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங், கடந்த ஆண்டு 2023 ஜூன் மாதம் கனடாவில் கொல்லப்பட்டார். இக்கொலை சம்பவம் இந்தியா - கனடா இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை மையமாக வைத்து இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது கருத்து மோதல்கள் நிலவி வந்தன. இந்நிலையில், கனடாவுக்கான இந்திய தூதரையும், இதர தூதரக அதிகாரிகளையும் திரும்பப் பெறுவதென மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"பிரிவினைவாதம் மற்றும் வன்முறை நிலவும் சூழ்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசின் நடவடிக்கைகள் இந்திய தூதர் மற்றும் குறிப்பிட்ட சில அதிகாரிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. அவர்களின் பாதுகாப்பை தற்போதைய கனடா அரசு உறுதி செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. எனவே, இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றுக் கொள்வதாக முடிவு செய்துள்ளோம். இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதம் மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு ஆதரவு அளிக்கும் ட்ரூடோ அரசு மீது நடவடிக்கை எடுக்க இந்திய அரசுக்கு உரிமை உள்ளது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
CanadaIndiaIndian Governmentnews7 tamil
Advertisement
Next Article