இந்திய அணியின் ‘ஜெர்சி' அணிந்து எம்எல்ஏ-ஆக பதவியேற்ற #VineshPhogat!
இந்திய அணியின் ஜெர்சி அணிந்து எம்.எல்.ஏ.வாக இன்று முன்னாள் மல்யுத்த வீராங்கனை ஹரியானா சட்டப்பேரவையில் வினேஷ் போகத் பதவியேற்றார்.
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனையாக இருந்தவர் வினேஷ் போகத். இவர் பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட நிலையில் 100 கிராம் எடை அதிகமாக இருந்த காரணத்திற்காக இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பின்னர், அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார்.
அண்மையில் ஹரியானாவில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக வினேஷ் போகத் போட்டியிட்டார். ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட வினேஷ் போகத் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை விட 6015 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இதையும் படியுங்கள் : இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொள்ள தயாராகும் ஈரான்… தீவிரமடையும் மோதல்போக்கு!
இந்நிலையில் இன்று (25.10.2024) சட்டசபை கூட்டத்தின் போது வினேஷ் போகத் எம்எல்ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் இந்தியாவின் ஜெர்சி அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தார். இதனை தொடர்ந்து வினேஷ் போகத் எம்எல்ஏவாக பதவியேற்ற நிலையில், அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.