"உலகின் 4வது பெரிய பொருளாதார நாடானது இந்தியா" - நிதி ஆயோக் சிஇஓ
ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, உலகில் 4வது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உயா்ந்துள்ளது என்று நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) வி.ஆா்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதுகுறித்து பேசியதாவது,
"புவி அரசியல் மற்றும் பொருளாதார சூழல் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தற்போது ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, உலகில் 4வது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உயா்ந்துள்ளது. இந்தியாவின் பொருளாதார மதிப்பு தற்போது 4 ட்ரில்லியன் டாலராக (சுமாா் ரூ.340 லட்சம் கோடி) உள்ளது.
இதையும் படியுங்கள் : கொச்சி அருகே கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்து – 24 பேரின் நிலை என்ன?
பெரும் பொருளாதார மதிப்பு கொண்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, சீனா, ஜொ்மனி ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. ஏற்கெனவே திட்டமிட்டபடி செயல்பட்டால், அடுத்த இரண்டரை முதல் 3 ஆண்டுகளில் உலகில் 3வது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உயரும்"
இவ்வாறு நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி வி.ஆா்.சுப்பிரமணியம் தெரிவித்தாா்.