இஸ்ரோ | விண்வெளி டாக்கிங் செய்யும் 4வது நாடு இந்தியா!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைக்கோள்களை விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பி வருகிறது. இதனை தொடர்ந்து நிலவு மற்றும் சூரியன் ஆய்வுக்காக விண்கலங்களை அனுப்பி அதிலும் வெற்றி கண்டுள்ளது. இதற்கிடையே விண்வெளியில் இந்தியாவிற்கு என்று தனியாக ஒரு விண்வெளி நிலையம் அமைப்பதற்காக விஞ்ஞானிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதற்காக, வடிவமைக்கப்பட்ட Spetex A, Spetex B ஆகிய 2 விண்கலன்களும் PSLV C-60 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த 2 டிச. 30ம் தேதி ஏவப்பட்டு விண்ணில் அனுப்பினார். அதன்பின் அவ்விரு விண்கலன்களும் ஒரே சுற்றுப்பாதையில் குறிப்பிட்ட தூர இடைவெளியில் ஒன்றன்பின் ஒன்றாக வலம் வந்தன.இரட்டை விண்கலன்கள் தலா 220 கிலோ எடை கொண்டவையாகும்.
இந்நிலையில், சுமார் 15 மீட்டர் முதல் 3 மீட்டர் நிலை இடத்திற்கு நகர்ந்து வெற்றிகரமாக முடிந்தது. சரியான முறையில் டாக்கிங் ஆரம்பிக்கப்பட்டது, இதன் மூலம் விண்கலம் வெற்றிகரமாக இந்திய 4வது இடத்தை பிடிக்கப்பட்டது. விண்கலம் திரும்புவதை மிக எளிதாக முடிந்தது. டாக்கிங் வெற்றிகரமாக முடிந்தது. என ISRO தெரிவித்தது.