Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“பெண் குழந்தைகளின் சாதனைகள் குறித்து இந்தியா பெருமை கொள்கிறது” - பிரதமர் மோடி வாழ்த்து!

அனைத்து துறைகளிலும் பெண் குழந்தையின் சாதனைகள் குறித்து இந்தியா பெருமை கொள்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
12:59 PM Jan 24, 2025 IST | Web Editor
Advertisement

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இது 2008 ஆம் ஆண்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. இது இந்திய சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

Advertisement

பெண்கள் சந்திக்கும் ஏற்றத்தாழ்வுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில் சம வாய்ப்புகளைப் பெறவும் இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைத்து பெண் குழந்தைகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

"இன்று தேசிய பெண் குழந்தைகள் தினத்தில், பெண் குழந்தைக்கு தொடர்ந்து அதிகாரம் அளிப்பதற்கும், அவர்களுக்கு பரந்த அளவிலான வாய்ப்புகளை உறுதி செய்வதற்கும் பாஜக அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

அனைத்து துறைகளிலும் பெண் குழந்தையின் சாதனைகள் குறித்து இந்தியா பெருமை கொள்கிறது. பெண் குழந்தைகளை மேம்படுத்தும் கல்வி, தொழில்நுட்பம், திறன்கள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு போன்ற துறைகளில் தனது அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது" என பதிவிட்டுள்ளார்.

Tags :
Achievementsfieldsgirl childIndiamodiprime minister
Advertisement
Next Article