Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"இந்தியாவிலுள்ள சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்த #Iran தலைவர் கருத்துக்கு இந்தியா கண்டனம்!

07:15 AM Sep 17, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியாவிலுள்ள சிறுபான்மையினர் குறித்து தெரிவித்துள்ள கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறோம் என வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

Advertisement

இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு பாதிப்பு என்று ஈரானைச் சேர்ந்த மத குரு மற்றும் மூத்த தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி தெஹ்ரான் நகரில் நேற்று (செப்.16) பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் தான் பேசிய கருத்துகளை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது :

"இஸ்லாமிய மதத்தின் எதிரிகள் நம்மை எப்போதும் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றனர். இந்தியா, மியான்மர், காஸா அல்லது ஏதாவதொரு பகுதியில், ஒரு முஸ்லிம் பாதிப்புகளை எதிர்கொள்வதைக் குறித்து நாம் கண்டுகொள்ளாதிருந்தால், நம்மை நாம் முஸ்லிம்கள் என கருதிக் கொள்ள முடியாது"

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : புரட்டாசி மாத பெளர்ணமி : #sathuragiri -ல் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!

இந்நிலையில், ஈரான் தலைவர் கூறிய கருத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறியிருப்பதாவது:

“ஈரானின் மூத்த தலைவர், இந்தியாவிலுள்ள சிறுபான்மையினர் குறித்து தெரிவித்துள்ள கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்.இதை ஏற்றுக் கொள்ள முடியாது, இந்த கருத்துகள் தவறான தகவல்களைக் கொண்டவை. சிறுபான்மையினர் குறித்து கருத்து தெரிவிக்கும் நாடுகள், பிற நாடுகளைக் குறித்து பேசும்முன், தங்கள் நாட்டின் நிலைமையைக் குறித்து கவலைகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
IndiaIran LeaderNews7Tamilnews7TamilUpdatessenior leader
Advertisement
Next Article