Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

Ind vs Eng | டாஸ் வென்ற இந்திய அணியின் பவுலிங்கில் திணறும் இங்கிலாந்து!

இந்தியா இங்கிலாந்து இடையேயான டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கில் விக்கெட்களை வீழ்த்தி அசத்தி வருகிறது
07:53 PM Jan 22, 2025 IST | Web Editor
Advertisement

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட், கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானதில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த மைதானம் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால் தற்போது பனிக்காலம் என்பதால், பௌலர்களுக்கு பனிப்பொழிவு சவால் அளிக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.  மைதானத்தில் இதுவரை முதலில் பௌலிங் செய்த அணிகளே ஆட்டங்களில் வென்றுள்ளன.

Advertisement

ஒரு நாள் T20 போட்டியின் இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (வி.கி), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர் உள்ளனர்.

இங்கிலாந்து கேப்டனாக ஜோஸ் பட்லர் , ஹாரி புரூக், பில் சால்ட், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டோன், ரெஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித், அடில் ரஷித் சாகிப் மஹ்மூத் ஆகியோர் உள்ளனர்.

இந்த நிலையில் முதல் டி20 போட்டியில் இந்திய அணி டாஸை வென்று பந்துவீச்சை  தேர்ந்தெடுத்துள்ளது. தற்போது ஆட்டம் தொடங்கியுள்ள நிலையில் 3-ஆவது பந்திலேயே, பிலிப் சால்ட்-ஐ  இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் டக் அவுட் செய்தார். அதேபோல மூன்றாவது ஓவரில் இங்கிலாந்து வீரர் பென் டக்கேட்டை 4 ரன்கள் எடுத்திருத்திருந்த நிலையில் அவுட் ஆக்கி அசத்தினார். இதேபோல அடுத்தடுத்த வந்த இங்கிலாந்து வீரர்களின் விக்கெட்களை வீழ்த்தி வருண் சக்கரவர்த்தியும் தன் பங்கிற்கு 2 விக்கெட்களை எடுத்து அசத்தியுள்ளார்.

Tags :
CricketENGLANDIndiaT20
Advertisement
Next Article