Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்ட 6.5 - 7% மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சி எட்டப்படும்" - #UnionFinanceMinistry அறிக்கை

10:21 AM Aug 23, 2024 IST | Web Editor
Advertisement

பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்ட 6.5 - 7 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி எட்டப்படும் என்று மத்திய நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இது தொடர்பாக ஜூலை மாதத்துக்கான பொருளாதார மறு ஆய்வு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"நடப்பு நிதியாண்டின் (2024-25) முதல் 4 மாதங்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வேகம் தக்கவைக்கப்பட்டுள்ளது. வரி வசூல் தளத்தை விரிவுபடுத்துதல் மற்றும் உயர் பொருளாதார செயல்பாடுகளால், மேற்கண்ட காலகட்டத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் அடுத்த கட்டத்துக்கு உந்தப்பட்டுள்ளது. உள்நாட்டு வா்த்தக நடவடிக்கைகள் மீண்டெழுந்துள்ளன.

இது, உற்பத்தி மற்றும் சேவை துறையின் வலுவான செயல்பாட்டில் பிரதிபலிக்கிறது. ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு தேவைகள் அதிகரிப்பால், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கண்டுள்ளது. வலுவான வரி வசூல், வருவாய் செலவினங்களில் ஒழுங்குமுறை மற்றும் துடிப்பான பொருளாதார செயல்பாடுகளால் நிதிப் பற்றாக்குறை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் முதலீட்டை ஆதரிப்பதன் வாயிலாக மூலதன செலவினம் உயர் நிலையில் பராமரிக்கப்படும்.

இதையும் படியுங்கள் : ”என் வாழ்க்கையை படமாக எடுத்தால் அதில் நானே நடிக்க தயார்” -#RahulDravid!

கடந்த ஜூலையில் சில்லறை பணவீக்கம் 3.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2019, செப்டம்பரில் இருந்து ஒப்பிடுகையில் இதுவே குறைந்த அளவாகும். மிதமான உணவு பணவீக்கத்தால் இந்த நிலை எட்டப்பட்டது. நாட்டில் உள்ள நீர்த்தேக்கங்கள் நிரம்பிவருவது, நடப்பு காரீஃப் மற்றும் எதிர்வரும் ராபி பயிர் விளைச்சலுக்கு நல்ல அறிகுறியாகும். இதன் மூலம் எதிா்வரும் மாதங்களில் உணவு பணவீக்கம் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் வளர்ச்சி வேகம் அதேநிலையில் நீடித்துவரும் சூழலில், உற்பத்தி மற்றும் சேவைத் துறை விரிவடைந்துள்ளதாக தரவுகள் மூலம் தெரியவருகிறது. மறைமுக வரி வசூல் சீராக வளர்ச்சியடைந்து வருகிறது. வங்கி கடனளிப்பும் அதிகரித்துள்ளது. பணவீக்கம் மிதமான அளவில் இருக்கிறது,சரக்கு - சேவை ஏற்றுமதி கடந்த ஆண்டைவிட இப்போது சிறப்பாக உள்ளது. பங்குச் சந்தைகள் தங்களின் உயர்நிலையை தக்கவைத்துள்ளன. அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பால் மொத்த முதலீடு உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நடப்பு நிதியாண்டின் பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்ட 6.5-7 சதவீத வளா்ச்சி என்பது சரியானதாகவே உள்ளது"

இவ்வாறு இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Economic GrowthEconomic SurveyFinance MinistryGDPGross Domestic ProductIndiaREPORT
Advertisement
Next Article